ஐ.பி.எல்லில் 5000 ரன்கள் குவிப்பு….. சாதனை நிகழ்த்திய “சின்ன தல”….. ரசிகர்கள் மகிழ்ச்சி…..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னா 5000 ரன்களை கடந்த முதல் ஐ.பி.எல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  

12ஆவது ஐபிஎல் போட்டியின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்திலிருந்தே சரியாக ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 29 ரன்கள் எடுத்தார். இறுதியில் 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரரான வாட்சன் 0 ரன்னில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து  அம்பத்தி ராயுடு28, ரெய்னா19, ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  இறுதியில் 17.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஜாதவ் 13*, ஜடேஜா 06* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில்  “சின்ன தல” சுரேஷ் ரெய்னா  இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் மொத்தம்  4985 ரன்கள் எடுத்த நிலையில் 5000 ரன்கள் எடுக்க அவருக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து 2 விக்கெட்டாக களமிறங்கிய ரெய்னா   19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம்   5000 ரன்களை கடந்த  ஐபிஎல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். மேலும் விராட் கோலி 4954, ரன்களில் 2ஆவது இடத்திலும், ரோஹித் சர்மா 4493 ரன்களில் 3ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.