“இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” மறியலில் ஈடுபட்ட மக்கள்…. போக்குவரத்து பாதிப்பு….!!!

மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வீடுகளை சூழ்ந்து மழைநீர் நிற்கின்றது. குறிப்பாக இந்திராநகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. ஆனாலும் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து மழை நீர் வெளியேறாமல் அங்கேயே நிற்கின்றது. எனவே பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வேலை, பள்ளி, கல்லூரி செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே மழைநீரை அப்புறப்படுத்த வேண்டி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும். மேலும் மழைநீர் தேங்காமல் நிற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *