40KM முதல் 50KM வரை பலத்த காற்று…. 10 மாவட்டங்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதோடு ஒரு சில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேற்கு வங்க கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *