தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்தவகையில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராதாபுரம், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது. மேலும் சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.