மழை வெள்ளம் : சடலத்தை கட்டையில் கட்டி கொன்று சென்ற அவலம்… வைரலாகும் வீடியோ ..!!

மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம்  பதைக்க வைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நீலியம்மா ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியில் இருந்த மலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் கரையிலேயே நிறுத்தப்பட்டது.

மலை ஆற்றை கடந்துதான் களம்பாளையம் கிராமத்திற்கு செல்ல முடியும் என்ற நிலையில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.பின்னர் வேறுவேறு வழியில்லாததால் நீலியம்மாளின் உடலை மரக்கட்டையில் கட்டி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தை கடந்து சென்றனர். மனது பதைபதைக்கும் இந்த காட்சி காண்போருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/SeithisolaiT/status/1160184981605322752

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *