“அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை “வானிலை மையம் தகவல் ..!!

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் ,மதுரை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் நேற்று  ஓரிரு இடங்களில் நேற்றையதினம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

மழை பெய்ய வாய்ப்பு இருப்பினும் தமிழகத்தின் பல பகுதிகளில் 4 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வழக்கத்தை மீறி வெப்பம் அதிகரித்து உள்ளதால் மக்கள் கவலையில் உள்ளனர் கத்திரி வெயில் தேதி முடிவடைந்த பின்பும் வெப்பம் குறையாமல் அதிகரித்து வருவதே மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.