வெளுத்து வாங்கிய வெயில்… திடீரென பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பகுதியில் நேற்று மதியம் பெய்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று மழை பரவலாக பெய்தது.

இதன் காரணமாக கோடை வெயிலில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களும், விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *