கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்….!!

வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலத்தின் பனமரம் என்ற பகுதியில் தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். கேரளாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இத்தனைக்கும் கேரள அரசு விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைத்து இருக்கின்றது.

விவசாயி தினேஷ்குமார் தற்கொலை குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பொருளாதார உதவி உள்பட தேவையான உதவிகளையும் , நடவடிக்கைகளையும் மேற்கொள்ள   வேண்டும். விவசாயிகள் கண்ணியத்துடன் வாழ்வதற்காக்க நானும், எனது கட்சியும் தொடர்ந்து  ஆதரவு அளிப்போம் என்று கேரள முதல்வருக்கு எழுதிய கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.