“ராகுல் பிறந்த போது உடனிருந்த நர்ஸ்” வைரலாகும் புகைப்படம்…!!

ராகுல் காந்தி பிறந்த போது மருத்துவமனையில் தன்னுடனிருந்த பெண் செவிலியரை சந்தித்து பேசிய போட்டோ வைரலாகி வருகின்றது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடுக்கு வருகை தந்துள்ளார். மேலும் முதல் நாள் நடைபெற்ற ராகுல் பயணத்தில் அக்கட்சியின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் வயநாட்டின் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்த ராகுல் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி பிறந்தபொழுது உடனிருந்த நர்சுடன் சந்திப்பு

இதையடுத்து தங்கள் தொகுதி மக்களுக்கான குறைகளை கேட்டறிந்த ராகுல் அவர்களிடம் புகார் மனுக்களை பெற்றார். மாவட்ட்டத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மீண்டும்  பேரணியாக சென்று திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்களை நோக்கி கையசைத்து  வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுலுக்கு சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் மற்றும் தொண்டர்கள் நின்று வரவேற்பளித்தனர். இதில் ராகுல் காந்தி பிறந்த பொழுது அந்த மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய  ராஜம்மா என்ற ஓய்வு பெற்ற பெண் செவிலியரை சந்தித்து பேசினார்.இந்த போட்டோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *