”காஷ்மீர் எங்க பிரச்னை” தீடீர் பல்டி அடித்த ராகுல்….!!

காஷ்மீர் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. இதில் பாகிஸ்தானோ அல்லது வேறுநாடுகளோ உடன்பட இடமில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

Image

பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீடீர் பல்டி அடித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்_டர் பதிவில் ,  காஷ்மீர் விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. இதில் பாகிஸ்தானோ அல்லது வேறுநாடுகளோ உடன்பட இடமில்லை.காஷ்மீரில் அமைதி நிலவுவதாக பலரும் கூறி வருவதில் உண்மை இல்லை. அங்கு வன்முறை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பாகிஸ்தான் வன்முறையை ஊக்குவிக்கிறது. என்று பதிவிட்டுள்ளார்.