” ராகுல் எதிர்மறையான தலைவர் அல்ல ” கே.எஸ் அழகிரி கருத்து….!!

ராகுல் காந்தி எதிர்மறையான தலைவர் அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று  இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் .

Image result for கே.எஸ் அழகிரி ராகுல்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , பதவியை நேசிக்காத சிறந்த தலைவர் ராகுல் காந்தி . அவர் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்திருந்தால் 2009லேயே பிரதமராக வந்திருக்க முடியும் . பல முறை அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது . இந்திய மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள , இளைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள அரசதிகாரத்தை புறந்தள்ளிவிட்டு நேருக்கு நேர் அமர்ந்து பேசினார்  ராகுல் காந்தி . அவர் எதிர்மறையாக தலைவர் அல்ல , அவர் எப்போதும் நேர்மையாக பேசுகிறார் , மக்களை நேசிக்கிறார்  என்று கே.எஸ் அழகிரி விளக்கம் அளித்தார்.