ராகுல் காந்தியின் எம் பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் யூனியன் சார்பாக தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பி ஜி ராஜேந்திரன், தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர்கள் ஜாகிர் உசேன் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் ராகுல் காந்தியின் எம் பி பதவி பகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பேச்சாளர் குமரி மகாதேவன் கலந்து கொண்டு பேசினார். மேலும் முடிவில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன் நன்றி தெரிவித்துள்ளார்.