“ராகுலே தலைவராக தொடர்வார்” காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து …..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்வார் என்று உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே தலைவராக  தொடர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

Image result for rahul gandhi

ஆனாலும் ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்த ராகுல் இன்று அதற்கான விளக்கம் அளித்து நான் காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லை என்று அறிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா செயல்படுவர் என்று சொல்லப்பட்ட நிலையில் , காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் ராஜினாமாவை ஏற்கும் வரை அவரே காங்கிரஸின் தலைவராக தொடர்வார் என கட்சியின் உயர்மட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.