காங்கிரஸ் ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி…. ராகுல் காந்தி உறுதி…..!!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுமென்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நாகர்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை வந்த ராகுல் காந்தி காலை 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும்  ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேஞ்ச் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற  கருத்தரங்கில் கலந்து கொண்ட ராகுல்காந்தி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.பின்னர் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் .

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரகுல்கந்தி , பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் , புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும்  திட்டம்  இடம்பெறும்.  இந்தியாவில்  சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்  பாதிக்கப்பட்டுள்ளது . சிறு மற்றும் நடுத்தர தொழிலை  முன்னேற்றுவதால்  வேலைவாய்ப்பை அதிகரிக்கமுடியும் . நாட்டில் நடக்கும்  பயங்கரவாதத்தை விட வேலையின்மையை தான் மக்கள் மிக பெரிய பிரச்சனையாக பார்க்கிறார்கள் , புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

மேலும் பேசிய ராகுல் காந்தி  விவசாயிகளும், விவசாயமும் இல்லாத இந்தியா எப்போதும் வலிமையானதாக இருக்காது .  காங்கிரஸ் கட்சி மத்தியில்ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஏற்கனவே காங்கிரஸ் ஆளும் மாநிலமான மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துவிட்டோம் என்று ரகுல்கந்தி தெரிவித்தார்.