ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு போகிறார் ரஹானே…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரஹானே டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மாற இருக்கிறார். 

இந்திய அணியின்  கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல்.லில் ராஜஸ்தான் அணி ரஹானே தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததால், அவர் நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ரஹானே டெல்லி அணிக்கு மாற இருக்கிறார். அவரை வாங்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Image result for rahane

இது தொடர்பாக டெல்லி அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராஜஸ்தான் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவது உண்மைதான். இப்போதே அதுபற்றி சொல்ல முடியாது. இன்னும் ஒப்பந்தம் முடியவில்லை. ஆகவே ஒப்பந்தம் முடிந்தவுடன் அறிவிக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.