தன் தாயை பாட வைத்து அழகு பார்த்த ராகவா லாரன்ஸ்….!!

நடிகர் மற்றும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன்பு தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் ஒன்றை கட்டினார். தற்போது அவர் தாய் என்கிற அமைப்பு ஒன்றை துவங்கியுள்ளார். யாரும் தங்கள் பெற்றோர்களை கை விட்டுவிடக்கூடாது என்பதற்க இந்த அமைப்பை ராகவா லாரன்ஸ் உருவாக்கியிருக்கிறார்.

இனிமேல் எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்பதற்காக ராகவா லாரன்ஸ் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த பாடலை அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிட ராகவா லாரன்ஸ், அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்துள்ளார். மேலும் அடுத்த படத்தில் பாட வாய்ப்பு தருவதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.