சுவையான  சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி சட்னி!!!

சுவையான  சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி சட்னி..

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – 1/4 கிலோ

வெங்காயம் –  1

தக்காளி –  1

காய்ந்த மிளகாய் –  2

உளுத்தம் பருப்பு – தேவையான அளவு

பூண்டு –  4  பல்

கடுகு – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

புளி – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

Radish க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய முள்ளங்கி , பூண்டு  , தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை  சேர்த்து   வதக்கி  கொள்ள  வேண்டும். இதனுடன் சிறிதளவு உப்பு , புளி சேர்த்து  அரைத்து  கொள்ள  வேண்டும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து , அரைத்த  கலவையை கொட்டிக் கிளறி  இறக்கினால்  சுவையான முள்ளங்கி சட்னி தயார்!!!