மீடூ இயக்கம் குறித்து ராதிகா ஆப்தே விளக்கம்…!!!

சிந்திக்கும் ஆற்றல் நிறைந்த சிறந்த நடிகை என்ற பெயரை ராதிகா ஆப்தே பெற்றுள்ளார். அதுவே அவருக்குத் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. பல மொழிகளைக் கடந்து தனது நடிப்பால் சினிமாவில் முத்திரை பதித்த  ராதிகா ஆப்தே, ஒரே நேரத்தில் சினிமாவிலும் நடிக்கிறார். வெப் தொடர்களிலும் தோன்றுகிறார்.

ராதிகா ஆப்தே க்கான பட முடிவு

 

இது பற்றி அவர் தெரிவித்தது தற்போது புகழ் பெற்றுவரும், வெப் தொடர்களுக்கு ‘சென்சார்’ கூடாது என்றே கூறினேன். அதற்கு என்ன காரணம் என்றால், மக்கள் எதை பார்க்க விரும்புகிறார்களோ அதை கண்டிப்பாக பார்க்கத்தான் போகிறார்கள்.

தொடர்புடைய படம்

 

மீடூ இயக்கம், திரைத்துறையில் ஏற்படுத்தி மாற்றம் குறித்து கேட்டபோது அவர் கூறியது. மீடூ இயக்கம் ஏற்படுத்திய பெரிய தாக்கம், இனி ஆண்கள் தவறு செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். பெண்களும் தங்கள் மீதான அத்து மீறல்கள் குறித்துப் பேச வெட்கப்பட தேவையில்லை என்று உணர்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் பெரிய முன்னேற்றம் தான்என்று தெரிவித்தார்.