“திமுகவில் இருந்து நீக்கம்” அதிமுகவில் இணைந்த ராதாரவி..!!

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார் 

கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து ராதாரவி திமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  நடிகர் ராதாரவி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது  இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி மீண்டும் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *