உலகை பிரம்மிக்க வைத்த “இந்திய தத்துவம்” ராதாகிருஷ்ணனின் அற்புத படைப்பு..!!

சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் மேலை நாட்டு தத்துவத்தை அனைவரும் தேடி சென்ற சமயத்தில் இந்திய தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பிய மஹான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவரது இந்திய தத்துவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக காண்போம்:

டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் மற்றும் சங்கரா ராமானுஜர் மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும் மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ பினன்ஸ், பிராட்லி போன்றோரின் தத்துவங்களையும் கற்று நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.

Image result for ராதாகிருஷ்ணன் இந்திய தத்துவம்

மேலை நாடுகளுக்குச் செல்லாமல் நம் நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமையுடையவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். தத்துவ மேதையான அவர் இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில் விதைக்க காரணமாக இருந்தார். 1918இல்  மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923ல் அவரது படைப்பான இந்திய தத்துவம் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகும்.

Image result for ராதாகிருஷ்ணன் இந்திய தத்துவம்

இந்து மத தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில் அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கிந்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையது. இன்றைய தத்துவங்களைத் தரமான கல்வி வாசகர்கள் உதவியுடன் மொழிபெயர்த்தால் மேற்கிந்திய தரங்களையும் இந்திய தத்துவம் மிஞ்சி விடும் என்றுரைத்தார்.  இந்தியத் தத்துவத்தை உலக வரைபடத்தில் வைத்த ஒரு தத்துவஞானி என்று அவரைக் கூறினால் அது மிகையாகாது.