ராதா கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டையில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனுர் மாத பூஜை கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராதா கல்யாணம் நடை பெற்றது.
இது அங்குள்ள சங்கீத மகாலில் வைத்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக இவ்விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.