துன்பமல்ல… இன்பம் மட்டுமே…. “நான் ஒரு ராணுவ வீரன்” சிறப்பு கட்டுரை..!!

நாட்டிற்காக பாடுபடும் ஒவ்வொரு ராணுவ வீரனும் நாட்டையே தன் வீடாக நினைக்கிறான். ஒரு வீரன் தான் ராணுவத்தில் இணைந்து இருப்பதை எப்படி பெருமை அடைகிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த அந்நியம். அவன் மனதின் எண்ணங்களே இந்த தொகுப்பு.

அனுதினமும் போர்க்களம், அனுக்கனமும் போர், எந்த நேரமும் தயார் நிலை, 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் ஓய்வு அறியாமல் உழைத்து கொண்டு இருக்கின்றனர் ராணுவ வீரர்கள்.

எப்பொழுது மரணிப்போம், எப்பொழுது உயிர் பிழைப்போம் என்று அவர்களுக்கே தெரியாது என்பது தான் எதார்த்தம். நாம் இங்கு நிம்மதியாக வாழ அவர்கள் அங்கு தூக்கத்தை தொலைத்து, தொலைதூரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிம்மதி என்கிற ஒற்றை வார்த்தைக்கு அர்த்தம் நமக்கு தெரியும். ஆனால் எங்கோ தனது மனைவியும் மகளும் மகனும் பெற்றோரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே நாட்களை கடத்துகின்றனர் ராணுவ வீரர்கள்.

மகனுக்கு தலைவலி என்றால் மருந்து அழிக்கவோ மனைவிக்கு துன்பம் என்றால் ஆறுதல் கூறவோ செல்ல மகளுக்கு செவி மடுக்கவோ அல்லது குடும்பத்துக்கு தோல் கொடுக்கவோ யாருக்கும் முடியும். ஆனால் ராணுவ வீரனுக்கு நினைத்து பார்ப்பது கூட சாத்தியம் இல்லை.

திருமணத்துக்காக விடுமுறை எடுத்து வந்து மனம் முடித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவேன் என்று சொல்லி விட்டு செல்பவர் மீண்டும் வருவார் ஆனால் நடந்து அல்ல பெட்டியில்.

பெட்டியில் வந்தால் அரசு மரியாதை, உயிர் தியாகம் என்ற பெருமை, ஓரிரு நாட்களுக்கு இதை பற்றிய பேச்சு இரண்டு நாளில் முடிந்து விடும் இந்த சிந்தனை. ஆனால் வீரனை இழந்த குடும்பம் வயதான தந்தை, முதுமையை தழுவிய தாய், கணவனையும் தன்னையும் இழந்து நிற்கும் மனைவி, இவ்வாறு ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் ஒரு கதை உண்டு.

இருந்தபோதும் சளைக்காமல் என் நாடு என் தாய் திருநாடு இதை பாதுகாப்பது என் கடமை, என்னை பாதுகாக்க என் நாடு இருக்கிறது நாட்டை பாதுகாக்கவும் நான் இருக்கிறேன். என்னை இழந்த என் குடும்பத்தை ஆதரிக்க என் நாடு உள்ளது. ஆனால் என் நாட்டை நான் இழக்க மாட்டேன் இங்கிருந்து அந்நியர் ஒரு பிடி மண்ணை கூட எடுத்து செல்ல விடமாட்டேன், இதுவே  என் சூளுரை.

பெட்டியில் நான் அடைக்கப்பட்டாலும், துண்டு துண்டாக வெட்டி போடாப்பட்டாலும், மீண்டும் பிறந்து வந்து ஏன் தாய் நாட்டை பாதுகாப்பேன். தீவிரவாதியின் நிழல் கூட என் நாட்டின் மீது விழ நான் அனுமதிக்க மாட்டேன்.

நான் மரணிக்கவில்லை விதைக்கப்படுகிறேன். மீண்டும் வருவேன் மீண்டு வருவேன்

 இப்படிக்கு நான் ராணுவ வீரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *