பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஜெர்சி திரைப்படம்

இந்திய கிரிக்கெட் வீரர் ராமன் லம்பா அவரது வாழ்க்கையை திரைப்படமாக இயக்குனர் கௌதம் அவர்கள்  இயக்கவுள்ளார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நானி அவர்கள் நடித்துள்ளார்

நடிகர் சத்தியராஜ் நடிகர்  நானி நடிகை சாரதா ஸ்ரீநாத்  போன்ற பிரபலங்கள் நடித்திருக்கும் படம் ஜெர்சி இந்த திரைப்படமானது தற்போது தெலுங்கில் தயாராகி வருகிறது இந்த திரைப்படம் நமது இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வீரரான ராமன் லம்பா  அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்  கிரிக்கெட் விளையாட்டில் பல திறமைகளைக் கொண்டவர் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி விட்டு பின் ஒரு தனியார் கிரிக்கெட் கிளப்பிற்காக கிரிக்கெட் விளையாடும் பொழுது எதிர் அணியினர் வீசிய அதிவேக பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இதனையடுத்து தலையில் பலத்த அடிபட்ட காரணத்தினால் கோமா நிலைக்கு சென்றார் இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது இருந்தும் எந்தவித சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கிரிக்கெட் வீரர் ராமன் லம்பாவின்  மரணம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் சக கிரிக்கெட்  வீரர்களையும்  சோகத்தில் ஆழ்த்தியது

தற்பொழுது அவரது வாழ்க்கையை மையப்படுத்தி ஜெர்சி என்னும் திரைப்படம் இயக்குனர் கௌதம் அவர்களால் இயக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்திற்கு கதாநாயகனாக நாணி  அவர்கள் தேர்வு செய்யப்பட்டு நடித்து வருகிறார் மேலும் நடிகர் சத்தியராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் கதாநாயகியாக சாரதா ஸ்ரீநாத்  அவர்கள் தேர்வு செய்யப்பட்டு நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இதனையடுத்து படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது மேலும் நானே ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல கிரிக்கெட் ரசிகர்களும் இந்த படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்