ராகுல் காந்தி தகுதிநீக்கம்… கருப்பு உடையுடன் சட்டப்பேரவைக்குள் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்….!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் தகுதிநீக்கத்தை கண்டிக்கும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தியும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்குள் வந்தனர்.

அதேபோல் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.