ராகுல் காந்தி விஷயத்தில் பாஜக சற்று பொறுத்திருந்திருக்கலாம்…. பிரசாந்த் கிஷோர் கருத்து….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் பதவி நீக்கம் விஷயத்தில் பாஜக சற்று பொறுத்திருந்திருக்க வேண்டும் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னை பொறுத்தவரை ராகுலுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுகிறது. பாஜக ஆட்சியில் உள்ளனர். அவர்கள் பெரிய மனதை காட்டியிருக்கலாம். ராகுல் மேல்முறையீடு செய்து அங்கு எதுவும் கிடைக்காதபோது நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று அவர் கூறினார்.