உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்று பி.வி சிந்து சாதனை….!!

உலகக் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் லாசர் நகரில் நகரில் உலக பேட்மிண்டன் பெண்கள் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறுகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 4 தர வரிசையில்  உள்ள ஜப்பானைச் சேர்ந்த  நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.  போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக அதிரடியாக மட்டையை சுழற்றிய சிந்து முதல் செட்டை 21 – 7 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாவது செட் ஆட்டத்திலும் அதிரடியாக திறமையை வெளிப்படுத்திய சிந்து இரண்டாவது செட்டையும் 21 – 7 என்ற கணக்கில் முன்னிலை வகித்து தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறார்.உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பொருத்தவரையில் பிவி சிந்து இதற்கு முன்பு இரண்டு முறை வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருக்கிறார்.ஆனால் தங்கப்பதக்கத்தை பெற வேண்டும் என்பதுதான் அவருடைய கனவாக இருந்தது வந்த நிலையில் இன்றைய தினம் அது நிறைவேறியுள்ளது. இதனால் இவருக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.