மீண்டும் ஏற்பட்ட புயலால் பாதித்த கலிபோர்னியா…. தண்ணீரில் மூழ்கிய சாலைகள்…. அவதிப்படும் மக்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் பல முக்கிய மாகணங்களில் ஏற்கனவே வீசிய புயலால் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து இன்னும் மீளாத சில கலிபோர்னியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் மீண்டும் புயல் வீசி உள்ளது. இதனால் கனமழையும் பெய்துள்ளது.

இந்த கனமழையினால் பல இடங்களில் சாலைகள் முழுமையாக நீரில் மூழ்கி உள்ளது. மேலும் பல இடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சாலைகளில் உள்ள வாகனங்களும் நீரில் மூழ்கி காட்சியளிகின்றது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.