ஸ்விட்சர்லாந்து நாட்டில் பெர்ன் மாகாணத்தில் நேற்று பலத்த புயல் காற்று வீசியுள்ளது. அந்த சமயத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த இரண்டு ரயில்கள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடம் புரண்ட பெட்டிகளில் உள்ள மக்களை நிற்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து விபத்தில் படுகாயம் அடைந்த 12 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.