வீட்டில் அடித்த துர்நாற்றம்…. சடலமாக கிடந்த வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!

பூட்டிய அறைக்குள் வியாபாரி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிபேட்டை மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கெமிக்கல் வியாபாரம் செய்து வந்த நிலையில் இருதய கோளாறு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அதன்பின் திடீரென இவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் குமார் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமார் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *