திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி…. புத்தக கண்காட்சி தொடக்க விழா…. சிறப்பு ஏற்பாடு….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி உள்ளது. இங்கு நேற்றைய நாளில் புத்தக கண்காட்சி சிறப்பாக ஆரம்பமானது. இதனை அந்த கல்லூரியின் முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் இங்கு நெல்லையில் உள்ள சி.ஆர். புத்தக ஏஜென்சி சார்பில் புத்தகங்கள் மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த புத்தகங்களும்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும்.

இதனையடுத்து மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இந்த கண்காட்சியில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்வில் மூத்த பேராசிரியர் முனைவர் பாலு, உடற்கல்வி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ், உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியை கல்லூரி நூலகர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் நூலக உதவியாளர் சரவணமுத்து ஆகியோர் சிறப்பான  முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply