தற்கொலை செய்து கொண்ட காதல் கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாயவன் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செந்தூரன் காலனியில் வசித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அபிநயா சிவகுமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபிநயாவின் கணவர் சிவகுமார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் அபிநயா அவரது பெற்றோர் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அபிநயாவின் உடலை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *