புத்தாண்டை கொண்டாடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் கூறியுள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்துள்ளார். சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டை கொண்டாட எந்தத் தடையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி அளித்ததற்கு கவர்னர் கிரண்பேடி தன் எதிர்ப்பை தெரிவிக்கின்றார். அவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதித்தால் நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது. தமிழக மக்கள் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு வரும்பொழுது கொரோனா நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்பிருக்கிறது, என்று கூறினார்.