பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வருமா…? எல்லாம் இப்படி இருக்கு…. பயணிகளின் எதிர்பார்ப்பு….!!

புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா என்று பொது பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் இருந்து வரும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி சென்றது. ஆனால் இந்தப் பேருந்துகள் ஒரு சில வாரங்கள் சென்று வந்ததாகவும், பின் செல்லவில்லை என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே பேருந்துகள் வந்து செல்லாததால் பயணிகள் வருகை இன்றி பேருந்து நிலையம் பராமரிப்பு இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் செடிகொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கின்றது.

ஆகவே பெரும் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலைய கட்டிடம் பயன்பாடு இன்றி அரசு பணம் வீணாகுவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எதற்காக பேருந்து நிலைய பயன்பாடு இல்லாமல் இருக்கின்றது என்றும் பயணிகள் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த கட்டிடம் சீரமைக்கபடவில்லை என்றால் இடிந்து விழும் அபாயம் இருக்கின்றது. ஆகவே பழுதடைந்து, புதர்போல் காட்சியளிக்கும் இந்த புதிய பேருந்து நிலையம் கட்டிடங்களை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகளின்  எதிர்பார்ப்பாக இருகின்றது .