சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் பாகம் 2, தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக் குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது டிரைலர் வரும் நவம்பர் 17ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த டிரைலர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Dropping an EXPLOSIVE BANGER before the MASS festival begins in Cinemas ❤🔥
Experience the MASSIVE #Pushpa2TheRuleTrailer on 17th November at 6:03 PM 🌋🌋
With a Blasting Event at PATNA 💥💥 #Pushpa2TheRule #Pushpa2TheRuleOnDec5th @alluarjun @iamRashmika #AlluArjun… pic.twitter.com/BQUG0sXnmL
— Pushpa2TheRule 𝕏🧢 (@uicaptures) November 11, 2024