அப்படி போடு செம!…. “லவ் டுடே” படத்தை இனி வீட்டிலும் பார்க்கலாம்….. சூப்பர் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி….!!!!!

பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ரவீனா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

அதன்பிறகு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த லவ் டுடே திரைப்படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 2-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடு தளத்தில் படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.