தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெல்லென்போஷ் நகரில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் அவர்களது வீட்டில் உள்ள படுக்கை அறையில் புஷ் புஷ் என்ற சத்தம் வந்துள்ளது. இதனால் அந்த குடும்பத்தினர் அவர்களது வீட்டை சோதனை செய்தனர். அப்போது தலையணைக்குள் இருந்து சத்தம் அதிகமாக வந்துள்ளது. உடனே அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது புஸ் புஸ் என்ற சத்தம் அதிகமாக கேட்டுள்ளது. இதனால் அவர்கள் பாம்பு அங்கு உள்ளது என்பதை அறிந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் வன அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த அதிகாரி தலையணையை தூக்கி அதன் அடியில் இருந்த விஷ பாம்பை பத்திரமாக மீட்டார். இந்த விஷ பாம்பு அடர் கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு, மஞ்சள் கலந்து காணப்பட்டது. இந்த வகையான பாம்பு தென்னாப்பிரிக்கா வனப்பகுதியில் அதிகமாக காணப்படும். இந்நிலையில் குடியிருப்புக்குள் புகுந்த அந்த பாம்பை வன ஆய்வாளர் அப்புறப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.