பஞ்சாப் அணியின் ஹாட்ரிக் சாதனை துளிகள்…!!

பஞ்சாப் அணியில் இதுவரை 3 வீரர்கள் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 

நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில்  வென்றது. இப்போட்டியின்  வெற்றிக்கு காரணமான சாம் கர்ரன் 4 ஓவரில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட் உட்பட  மொத்தம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சாம் கர்ரனின் இந்த ஹாட்ரிக் விக்கெட் பஞ்சாப் அணியின் 3வது வீரரின்  ஹாட்ரிக் விக்கெட்டாகும்.

2009 ஆம் ஆண்டு பெங்களூருக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் யுவராஜ் சிங்  11. 5, 11. 6,  13. 1 ஓவர்களில்   ராபின் உத்தப்பா, ஜாக் காலிஸ், பெளச்சர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

Image result for 2019 ஆண்டு ஐபிஎல் பஞ்சாப் அணியின்  யுவராஜ் ஹாட்ரிக்

அதே 2009ம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் யுவராஜ் சிங் 11.6, 13.1, 13.2 ஓவர்களில் கிப்ஸ், சைமண்ட்ஸ், வேணு கோபால் ராவ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

Related image

2016 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அக்சர் பட்டேல் 6.5, 6.6, 10.1 ஓவர்களில் தினேஷ் கார்த்திக், பிராவோ, ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

2019 நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சாம் கர்ரன் 17.6, 19.1, 19.2 ஓவர்களில் ஹர்சல் பட்டேல், ககிசோ ரபாடா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.