பஞ்சாப் vs டெல்லி மோதல்….. இரு அணிகளும் பயிற்சியில் தீவிரம்….!!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.  

12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் தற்போதைய ஐபிஎல் தொடரில்  3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டு அணிகளும் சமநிலையில் புள்ளிகளை பெற்றுள்ளது. ஆகவே இன்றைய போட்டியில்  வெற்றி பெற வேண்டும்  என்ற முனைப்பில் இரண்டு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது.ஒட்டுமொத்தமாக பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளது.  இதில்  டெல்லி 1 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.