அரைசதம் விளாசிய கெய்ல்…. பஞ்சாப் அணி 11ஓவர் முடிவில் 99/2..!!

பஞ்சாப் அணி 11 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 99 ரன்களுடன் விளையாடி வருகிறது  

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், கே.எல் ராகுலும் களமிறங்கினர். கிறிஸ் கெய்ல் தொடக்க முதலே அதிரடியில் இறங்கினார்.

ஒருபுறம் கே.எல் ராகுல் பொறுமையாக விளையாடி கொண்டிருக்க பவர் பிளே கடைசி ஒவரான  முகமது சிராஜின் 6 ஓவரில் கெய்ல் சிக்ஸர், பவுண்டரி என 24 ரன்கள் விளாசினார். அதன் பிறகு பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த கே.எல் ராகுல் சாஹல் வீசிய 7 வது ஓவரில் முதல் பந்தை சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் கே.எல் ராகுல் 18 ரன்கள் எடுத்த நிலையில் சிக்ஸர் அடிக்க முயன்று ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.அடுத்து வந்த மயங் அகர்வால் அதிரடியில் இறங்கி 15 (9) ரணில் வெளியேறினார். அதன் பின் சர்பராஸ் கான் களமிறங்க கிறிஸ் கெய்ல் அரைசதம் கடந்தார்.  தற்போது கெய்ல் 56 (38) ரன்களிலும், சர்பராஸ் கான் 6* (4) ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.