டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்…..!!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 166 ரன்கள் குவித்துள்ளது.  

12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுலும், கர்ரனும் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடி காட்டிய  கே.எல் ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் கர்ரன் 20 (9), அகர்வால் 6, என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின் மில்லரும், சர்பராஸ் கானும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.அதன் பின் சர்பராஸ் கான் 39(29)ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டேவிட் மில்லர் 43 (30) ரன்னில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின் வந்த வீரர்கள் வில்ஜோன் 1,கேப்டன் அஷ்வின் 3, முருகன் அஸ்வின்1, முகமது சமி 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. மந்தீப் சிங் 29*(21), ரன்னிலும் முஜீப் 0* ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து டெல்லி அணி 167  என்ற இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது.