அதுக்குன்னு இப்படியா பண்ணனும்…. நண்பர்களின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வியாபாரியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த நண்பர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வியாபாரியான ஜார்ஜ் என்பவர் 1500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து பாண்டியன் தனது நண்பர்களான மாரிமுத்து மற்றும் மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒர்க்ஷாப் அருகில் நின்று கொண்டிருந்த ஜார்ஜிடம் பாண்டியனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு அவரது நண்பர்களான மாரிமுத்து மற்றும் மாணிக்கம் ஆகிய  இரண்டு பேரும் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

அப்போது கோபமடைந்த இரண்டு நண்பர்களும் இணைந்து சுத்தியலால் ஜார்ஜின் தலையில் பலமாக அடித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்த வழக்கை விசாரித்த திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் குற்றவாளியான மாரிமுத்து மற்றும் மாணிக்கம் ஆகியோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *