தனுஷிற்காக செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் முதல் நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே வரை இசையில் அசாத்தியமான மாயாஜாலங்களை நிகழ்த்திய செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைகிறது. எட்டாவது முறையாக இணையும் இந்த கூட்டணியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிக்க, யுவன் அதற்கு இசை அமைக்கிறார். தமிழ் சினிமாவில் தனுஷ் என்னும் அற்புதமான நடிப்பு கலைஞரை வளர்த்தெடுத்தது செல்வராகவன் வெற்றிமாறனுக்கு எந்த அளவு பங்களிப்பு இருக்கின்றதோ, அதே அளவுக்கு யுவன்சங்கர்ராஜா விற்கும் பங்களிப்பு இருக்கின்றது.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என தனுஷ் நடித்த ஆரம்பகால படங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருந்தவர் யுவன் சங்கர் ராஜாதான். அதிலும் செல்வராகவன் படங்களில் மட்டும் யுவன் இசை மிகவும் சிறப்பானதாக இருக்கும். தனுஷ் இல்லாமல் செல்வா இயக்கிய செவன் ஜி ரெயின்போ காலனி இதற்கு சிறந்த உதாரணம்.
துரதிஷ்டவசமாக யுவன் இல்லாமல் சில படங்களை செல்வராகவன் இயக்கி இருக்கிறார். அவற்றிலும் இசை சிறப்பாகவே கையாளப்பட்டு இருந்தது. இருப்பினும் செல்வராகவன் யுவன் ஜோடி ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும். தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் இசையமைக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.