“வேண்டாம் என்று சொல்லவில்லை”… இந்தி திணித்தால் யாரும் ஏற்க மாட்டார்கள்… புதுச்சேரி முதல்வர்..!!

எல்லா மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள் என்று   புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் இந்தி தினம் நேற்று  கொண்டாடப்பட்டது.  இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வாழ்த்து மடலாக  ஒன்றை பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

Image result for அமித் ஷா

இதையடுத்து அமித்ஷாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு முக ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கி தமிழர்கள் எதிர்ப்பை காட்டினர்.

Image result for narayanasamy

இந்நிலையில் அமித்ஷாவின் ட்விட்  குறித்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  இந்தி குறித்த கருத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா திரும்பப்பெற வேண்டும். எல்லா மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இந்தி வேண்டாம் என்று சொல்லவில்லை.  இந்தி திணிப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.