கோப்புகளை கையாளுவதில் சிரமம்…. ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்து விட்டான். இதற்கு காரணமான அறிவியல் பட்டதாரி ஆசிரியரான சங்கீதா என்பவரை தலைமையாசிரியர் கீதாஞ்சலி என்பவர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா மாதிரி வேதியியல் உப்பை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கீதாஞ்சலியை பாசாங்கரை நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், சாந்தி என்பவரை முத்துப்பட்டி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், சங்கீதாவை அண்ணாநகர் பள்ளிக்கும் தற்காலிகமாக அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்துள்ளனர். இந்நிலையில் நிதி சார்ந்த கோப்புகளை கையாளும் போது இரண்டு தலைமையாசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

எனவே மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தலைமையாசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவை வழங்க வேண்டி மாவட்ட தலைவர் தாமஸ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் துணை தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *