14 ஆண்டு கால கோரிக்கை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் சுமார் 14 ஆண்டு காலமாக கோரிக்கை விடுக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

இதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு துணை தலைவர் கணபதி முன்னிலை வகித்துள்ளார். இதில் மாதர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.