இறந்தவரை கொண்டு செல்வதில் சிரமம்…. பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாலம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாளையத்தார் ஏரியானது கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு அருகில் வசிக்கும் சமத்துவபுரம் கிராம மக்களுக்கு ஊரின் கிழக்குப் பகுதியில் சுடுகாடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஏரியின் ஒரு பகுதியை பொதுமக்கள் சுடுகாடு செல்வதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி வழியாக இறந்தவரை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதால் பாலம் அமைத்து தருமாறு தனியார் பள்ளியின் அருகில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *