புரதச்சத்து நிறைந்த வெஜ் ஆம்லேட்!!! 

வெஜ்  ஆம்லேட்

தேவையான  பொருட்கள் :

கடலைப் பருப்பு – 1/4 கப்

துவரம் பருப்பு – 1/4 கப்

பாசிப் பருப்பு  – 1/4 கப்

உளுந்து  – 1/4 கப்

முந்திரி  – 1/4 கப்

மக்காச்சோளம் – 1/4 கப்

முழு கோதுமை –  1/4 கப்

பச்சைமிளகாய் –  2

பெரிய வெங்காயம் –  1

கறிவேப்பிலை –  தேவையானஅளவு

மஞ்சள் தூள் – தேவையானஅளவு

மிளகுத் தூள் –  தேவையானஅளவு

உப்பு – தேவையானஅளவு

veg omelette recipe க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு,  பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பின்  இதனுடன் தண்ணீர்விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு  சேர்த்து தோசைக்கல்லில் போட்டு எடுத்தால்  வெஜ்  ஆம்லேட்   தயார் !!!