தல அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போன தயாரிப்பாளர் போனிகபூர்…!!!!

நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனிகபூர், அது குறித்து டுவிட் செய்துள்ளார்.

பிங்க்’ படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனிகபூர், அது குறித்து டுவிட் செய்துள்ளார். அதில் “நேர்கொண்ட பார்வை படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டேன். அவர் ஹிந்தி படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்தால் அவருக்கென்று 3 ஆக்ஷன் கதைகள் வைத்திருக்கிறேன். அதில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று போனிகபூர் பதிவிட்டுள்ளார்.