பருவம் படுத்தும் பாடு….!!

பருவ வயது என்பது நமது முழு வாழ்க்கையில் ஒரு பொற்காலமாக கருதக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பருவ வயதில் மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் அழகின் முழுமையும் ஆரோக்கியத்தின் உச்சகட்டமும் மற்றும் துடிப்போடும் பொலிவோடும் விளங்க கூடிய அற்புதமான காலமாகும். உடல்நல தொந்தரவுகள் என்பது எல்லா வயதினருக்கும் இயல்பு என்றாலும் இந்த பருவ வயதில் அதிகமாக ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும் அதனை ஹோமியோபதி மருத்துவத்தில் எவ்வாறு குணப்படுத்துவது என்பது பற்றியும் காண்போம்.

 

மாதவிடாய் கோளாறுகள்:

பருவ வயதுப் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படத் துவங்கிய ஆரம்ப காலங்களில் ரத்தப்போக்கு முறையாகவும் சீராகவும் சரியான இடைவெளியிலும் ஏற்படாமல் இருப்பது சகஜம். ஆரம்பத்தில் சுமார் 50 சதவீதம் பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தி ஆகாமல் பிறகு ஹார்மோன் சுழற்சி சரிவர செயல்படும்போது மாதவிலக்கு முறையாக இயங்கும்.

மாதவிலக்கு என்பது சுமார் 38 நாட்களுக்கு ஒரு முறை என்பது இயல்பான ஒன்று என்றாலும் முன்னே மூன்று நாட்கள் சீக்கிரமாக படுவதும் அல்லது பின்னே மூன்று நாட்கள் தள்ளிப் போவதும் அதாவது 25 நாட்கள் முதல் 31 நாட்கள் வரையில் மாதவிலக்கு ஏற்பட்டால் தவறில்லை. இது 21 நாட்கள் குறைவாக அல்லது 35 நாட்களுக்கு அதிகமாக தள்ளிப் போகிறது என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அது போன்று ஏழு நாட்களுக்கு அதிகமாகவும் உதிரப்போக்கின் அளவு மிகவும் அதிகமாக இருப்பின் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். சாதாரணமாக 20 முதல் 60 மில்லி வரை இந்த காலங்களில் ரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பு. சுமார் 80 மில்லிக்கு அதிகமாகபடுவது தவறாகும்

Related image

இவை யாவும் ஹார்மோன் சுழற்சியை சரிசெய்ய காரணங்களை கொடுப்பதால், நமக்கு உள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையான சுழற்சியை உலுக்கி விடுவது போன்றாகிவிடும். இதனால் பிறகு பலவிதமான கோளாறுகள் ஏற்படலாம். ஆனால் ஹோமியோபதி மருத்துவ முறையில் மாதவிடாய் கோளாறுகளுக்கு உடல் மற்றும் மன நிலைக்கு தகுந்தவாறு நிறைந்த மருந்துகள் உள்ளன.அவற்றை ஆராய்ந்து சரியாக தெரிந்தெடுத்து கொடுக்கப்படும் மருந்துகள் இந்த ஹார்மோன்கள் மாறுபாடுகளை சரி செய்து இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை ஏற்படுத்தி மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது.

மாதவிலக்கின் போது சிலருக்கு வயிற்று வலி மிகுதியாக காணப்படும். இதனை  ‘Dysmenorrhoea’ என்கிறோம். சில பெண்களுக்கு அடி வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டு, சிலருக்கு தொடை, இடுப்பு என்று இந்த வலி பரவக்கூடும். சிலருக்கு வாந்தி எடுப்பது போன்ற உணர்வு ஏற்படும். இத்தகைய நிலைக்கு ஹோமியோபதியில் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. இம்மருந்துகள் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வழியினை போக்குவதோடு மட்டும் இல்லாமல் இயல்பான உதிரப்போக்கை ஏற்படுத்தி இந்த மூன்று நாட்களில் மற்ற நாட்களை போன்று சகஜமான வாழ்க்கைக்கு திரும்ப உதவுகின்றது.

முந்திய மாதவிடாய் நோய் Premenstrual Syndrome (PMS):

இது மாதவிலக்கிற்கு 10 அல்லது 14 நாட்களுக்கு முன்பிருந்து மாதவிலக்கு ஏற்படுகின்ற வரை உடல் மற்றும் மனநிலையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை குறிக்கிறது. இந்த PMSல் உடல் மனம் மற்றும் செயல்பாடுகளில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அறிகுறிகள், அதன் வேகம், காலவரையறை யாவும் மாறுபட்டு இருக்கும்.

மனநிலையில் எதிர்பார்ப்பு, கோபம், எரிச்சல் ஏற்படுகிறது. திறமையின்மையும் வேகம் இன்மையும் ஏற்படுகிறது. படபடப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப்போக்கு முதலியன ஏற்படலாம். மார்பகங்கள் விண்ணென்று கனத்து வலி ஏற்படும். தலைவலி, மூட்டுவலி, கைகளில் வலி முதலியன ஏற்படலாம். இந்த PMS என்பது குறிப்பாக சினைமுட்டை வெளிப்பட்ட உடன் தோன்ற ஆரம்பிக்கும். இது மாதவிலக்கு ஆரம்பித்தவுடன் அல்லது முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் யாவும் நீங்கிவிடும். இந்நிலைக்கும் ஹோமியோபதியில் ஹார்மோன்களையோ அல்லது வலிநிவாரணிகளையோ கொடுக்காமல் எளிதாக குணப்படுத்த பல மருந்துகள் உள்ளன.

மனநிலை பாதிப்புகள்:

பருவ வயதில் மனநிலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் சிறிய மனப்போராட்டத்தின் விளைவாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஏற்படும் மன கசப்பினால் மனக்கவலை, மனத்தளர்ச்சி ஏற்படுவது சகஜமாக உள்ளது. பருவ வயது ஆண்களை விட பெண்களுக்கு இந்த தடுமாற்றங்களை அதிகம் ஏற்படுத்துகிறது.

தூக்கம் பாதிப்பு, உணவு வகைகளில் விருப்பமின்மை, தனது தோற்றத்தில் கவனமின்மை, நண்பர்களிடமிருந்தும் வீட்டாரிடம் இருந்தும் ஒதுங்கி போதல், தனிமையில் நாட்டம், இவைகள் யாவும் மன தளர்ச்சிக்கான அறிகுறிகளாகும்.இவர்களை பெற்றோர்கள் ஆரம்ப நிலையிலேயே கவனித்து என்ன தேவையோ அதனை கலந்தாலோசித்து அல்லது மருத்துவரின் ஆலோசனையோடு வழிமுறைகளைக் கண்டறிந்து பக்குவமாக நடந்து கொண்டால் அவர்களை தீவிரமான மனநிலை பாதிப்பிற்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.

இல்லை என்றால் அவர்களுடைய பள்ளிப் படிப்பில் முன்னேற்றம் இன்மையும் மற்ற பொது விஷயங்களில் திறமையின்மையும் ஏற்பட்டு பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். ஏனென்றால் மனத் தளர்ச்சி என்பது அவர்களுடைய உண்மையான திறனின் சக்தி பெரும் பகுதியை அழித்துவிடும். ஹோமியோபதியில் உடல் பிரச்சினைகளை விட மன நல மாறுபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மருந்துகள் தேர்வு செய்யப்படுவதால் இத்தகைய மன நலம் பாதிப்புகளை முழுமையாக குணப்படுத்த இயற்கையான வழியில் துணைபுரிகின்றது.

பருக்கள்:

பருவ வயதில் ஏற்படும் பருவானது எவ்வளவு குறைவாக இருந்தாலும் இது மன அளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. பரு என்பது செபாசியஸ் கிளாண்ட் (Sebacious gland) எனும் எண்ணைப்பசை சுரக்கும் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படுவதால் ஏற்படுகின்ற ஒரு நிலை. பாக்டீரியா தொற்றினால் இது அதிகமாக கூடும். பரம்பரையும் பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

Image result for பருக்கள்

 

முகத்தில் எண்ணெய் பசை அதிகம் சுரப்பவர்கள் குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை மென்மையான சோப் உபயோகித்து தண்ணீரால் நன்கு கழுவுவது சாலச்சிறந்தது. இவர்கள் அதிக அளவு கொழுப்பு சத்துள்ள பதார்த்தங்கள் இனிப்புகள் ஆகியவற்றை தவிர்த்தல் நலம். அதிகமாக கீரைகள், காய்கறிகள், பழங்களை உட்கொள்வது சிறந்தது. ஹோமியோபதியில் பருக்களை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பருக்கள் வராமல் தடுக்கவும் தழும்புகளை எளிதில் மறையச் செய்யவும் மருந்துகள் உள்ளன. இவைகள் பருக்களை மறைய செய்து உங்கள் முகப் பொலிவைக் கூட்டி தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.

தேவையற்ற முடி வளர்ச்சி:

தலையில் முடி சிறிது கொட்டினாலும் கவலைப்படும் பெண்கள் தேவையற்ற இடங்களில் அதிகமாக முடி வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் மிகுந்த கவலைக்கு உள்ளாகின்றனர். தலையைத் தவிர மற்ற இடங்களில் குறைந்த அளவு முடி வளர்ச்சி என்பது பெண்களுக்கு இயல்பாக இருக்கக்கூடியதே. ஆனால் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது குறிப்பாக தாடி, மீசை, மார்பு, அக்குள், முதுகு ஆகிய இடங்களில் தடிமனாகவும் கருப்பாகவும் வளர்வதை ‘Hirsutism’ என்கிறோம்.

Related image
ஹைபர் அன்ரோ ஜெனிமியா என்ற நிலையில் ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் பெண்களுக்கு அதிகமாக உற்பத்தியாவதால் அல்லது அதனுடைய செயல்பாடு அதிகம் இருப்பதால் இத்கதைய ரோம வளர்ச்சி ஏற்படுகிறது. சினைப் பைகள் மற்றும் அட்ரினல் சுரப்பிகள் இந்த கார்மோனை அதிகம் உற்பத்தி செய்து விடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது.

இத்தகைய தேவையற்ற முடி வளர்ச்சியை ஹோமியோபதியில் constitutional மருந்துகளை கொடுக்கும்போது இந்த கார்மோன் மாறுபாடுகளின் நிலை சீர்பட்டு முடி வளர்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்தி பெண்மையை பாதுகாக்கிறது.

முடி வளர்தல்:

பெண்களுக்கு உடலில் எத்தகைய தீவிரமான தொந்தரவுகள் இருப்பினும் அதை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பது முடி உதிரும் நிலைக்குதான். ஏனென்றால் கூந்தலின் அடர்த்தி பெண்மையின் பொலிவிற்கும் அவளது ஆரோக்கியத்திற்கும் சான்றாக அமைகிறது. இயல்பாக 90 சதவிகிதம் முடியானது வளரும் நிலையில் இருக்கும். சுமார் 10% உதிரும் நிலையில் இருக்கும். ஆகவே தினமும் இருபது முதல் முப்பது முடிவரை உதிர்வது என்பது இயல்பான ஒன்றுதான்.

இந்த உதிரும் நிலைக்கு தகுந்தவாறு புதிதான முடி வளரும் நிலையில் உள்ள முடி சமன் செய்வதால் உரோம அடர்த்தி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஆனால் முப்பது முடி வளரும் நிலையில் இருந்து நூற்றுக்கணக்கான முடிகள் உதிரும் பட்சத்தில் கூந்தலின் அடர்த்தி குறையும்.

Image result for புதிதான முடி வளரும்

முடி உதிர்தல் என்பது ஓயாத உழைப்பினாலும் மன உளைச்சலாலும் ஏராளமாக ஏற்படும் இரத்தப் போக்கினாலும் இரும்புச் சத்து குறைவதாலும் மற்றும் பொடுகு செதில் படை நோய் எக்சீமா போன்ற நோய்களாலும் ஏற்படுகிறது. முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் இருப்பதற்கு காரணம் முடியின் வேர்ப் பகுதி வலுவாக இருப்பதுதான். ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகள் இந்த வேர்ப்பகுதியினைப் பலப்படுத்துகிறது.

மேலும் தலைப்பகுதியில் ஏற்படும் பொடுகு, செதில் படை நோய், எக்சீமா போன்ற நோய்களை முற்றிலும் குணப்படுத்துவதால் முடி உதிர்வது தவிர்க்கப்படும். அடர்த்தியான கூந்தலுக்கு வழிவகுக்கிறது. அதுபோன்ற இளநரை என்பது மெலனின் என்ற நிறமி அணுக்கள் அழிவதால் இளவயதிலேயே முடிகளுக்கு வெள்ளை ஏற்படுகிறது. இதனையும் ஹோமியோபதியில் ஆரம்ப நிலையிலேயே கவனிக்கப்படும் பொழுது எளிதாக குணப்படுத்த இயலும்.