“விஜய்மல்லையா மனு ஏற்பு” இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்….!!

நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் மல்லையாவை  இந்தியாவுக்கு கொண்டுவர சிக்கல் ஏற்பட்டுள்ளது . 

SBI உள்ளிட்ட இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர்  விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது.

Image result for விஜய் மல்லையா

அதில் தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதிக்க கூடாது என்ற விஜய் மல்லையா_வின் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும். மேலு இந்த வழக்கு மல்லையாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் அவர் அங்குள்ள உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். இதனால்  விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர சிக்கல் நீடிக்கிறது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *